பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்கள் மாணவர்களை மூன்று நிமிடங்களுக்குள் இறக்கிவிட்டு அந்த இடங்களில் இருந்து செல்லவேண்டும். வாகனங்களை வீதிகளில் நிறுத்திவைக்க அனுமதிக்கப்படமாட்டாது என மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடனான சந்திப்பொன்று இன்று மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இதேவேளை, வைத்தியசாலைகளில் ஏற்படும் மக்கள் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக வைத்திய பரிசோதனைக்காக மாதாந்தம் வரும் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை மாதாந்த அடிப்படையில் வழங்காது இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளை ஒரேதடவையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து திரும்பும் நோயாளர்களின் அவசர நிலைமையைக் கருதி மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கே. டி. ஜயலாத்தின் வேண்டுகோளுக்கிணங்க, ராகமை மற்றும் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கிடையில் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் முதலுதவி நிலையமொன்றை அமைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.