இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஒருவர் மீது மற்றவர் குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த, மாநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சிந்திக்காமல், மற்றவர்களுக்கு விரல் நீட்டும் அரசியல்வாதிகளை நாம் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் சூளுரைத்தார்.
இன்று (2) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “ நாட்டை பாதுகாக்கும், நாட்டை உருவாக்கும் மக்கள் இயக்கத்தின்” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இஸ்லாமிய மதவாத அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த அனைவரும் கட்சி, அரசியல், இன, மத பேதங்களின்றி ஒன்றிணையும் காலம் உருவாகியுள்ளதாகவும், நாட்டின் இன்றைய நிலையால், பொருளாதார நெரக்கடி, சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி, முதலீடு பிரச்சினைகள் என்பவற்றுடன் பாதுகாப்பு செலவீனங்களும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.