ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி

303 0

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது. 

இலங்கையில் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை அதிகரிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவிருக்கிறது. 

இலங்கையில் சிறிய, நுண் மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வங்கி 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. 

நுண் நிதித்துறை, சுகாதாரம் என்பன பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கென ஆறு மில்லியன் டொலர்கள் முதல் 13மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க வங்கி திட்டமிட்டிருக்கிறது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 52 ஆவது வருடாந்த மாநாடு பீஜி தீவில் நேற்று ஆரம்பமானது. இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இலங்கைக் குழுவினர் பிஜி சென்றிருக்கிறார்கள்.