கிளிநொச்சி புநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாய் பலியானதுடன், 3 வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியல் உயிரிழந்த நபரின் காணியில் இன்று காலை 7 மணியளவில் யானை தென்னங்கன்றுகளை உட்கொண்டிருந்த வேளை, குறித்த யானையை துரத்த முற்பட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிவநேயசன் சுகாசினி என்ற தாய் உயிரிழந்ததுடன், அவரது 3 வயது பெண் பிள்ளையும் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளிற்காக அழைத்து செல்லப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியும் கிளிநாச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.