தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;
28. தனியார்துறை ஊழியர்களின் ஆகக்கூடிய சம்பளத்தை அதிகரித்தல்
2016ஆம் ஆண்டு இல 3இன் கீழான ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் கீழ் 2016ஆம்ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் ரூபா.10000மற்றும் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கபட்டிருந்தது.
தற்போது நிலவும் வாழ்க்கை செலவுக்கு பொருத்தமான வகையில் தனியார் துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 12,500 ரூபாவாகவும் ஆகக் குறைந்த நாளாந்த கொடுப்பனவு 500 ரூபாவாகவும் இருக்க வேண்டும் என தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை சிபாரிசு செய்துள்ளது.
இந்த சிபாரிசை கவனத்தில் கொண்டு தனியார்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2016ஆம் ஆண்டு இல. 3யின் கீழான ஊழியர்களின ஆகக்குறைந்த சம்பள சட்டத்தில் திருத்ததை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற தொழில் மற்றும் தொழில்சங்க அமைச்சரின் கோரிக்கைக்கமைவாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.