டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 5 திகதி டுபாயில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் வைத்து பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இதுவரை நாடுகடத்தப்பட்ட நிலையில், மாகந்துரே மதூஷ் மாத்திரம் டுபாயில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இந்த மனுவை கடந்த 18ம் திகதி விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை இன்று 02ம் திகதி வரை ஒத்திவைத்தது.
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தன்னை இலங்கைக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ நாடு கடத்த வேண்டாம் எனக்கோரி டுபாய் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.