இந்தியா-சீனா உறவில் மறுசீரமைப்பு தேவை

297 0

201610121344134124_sino-india-ties-under-stress-need-recalibration-menon_secvpfஇந்தியா-சீனா உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு தேவை என்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டும் விவகாரத்தால் இந்தியா பல்வேறு நாடுகளை எச்சரித்து வருகிறது. இதனால் அந்த நாடுகளுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கூட்டுப் போர் பயிற்சி மேற்கொண்ட ரஷ்யாவிற்கு இந்தியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியா-சீனா உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு தேவை என்றும் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அவர் கூறியதாவது:-இந்தியா சீனா இடையேயான உறவு நெருக்கடியில் உள்ளது. மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் இந்த நெருக்கடியை உங்களால் பார்க்க முடியும்.

இந்தியா-சீனா உறவின் எதிர்காலம் குறித்து நான் எதுவும் அவநம்பிக்கையாக தெரிவிக்கவில்லை. இருநாடுகளிடையேயான உறவில் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இருநாடுகளிடையே போதுமான அளவில் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ள நிலையில் சிவசங்கர் மேனன் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2011-14 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் பதவி வகித்தார்.