ஏறாவூர் வாவிக்கரையோரமாக உள்ள தனியார் வெற்றுக் காணியொன்றில் வீசப்பட்டிருந்த ஒரு தொகுதி பழைய வெடிபொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு எல்லைப்புற வெற்றுக்காணியில் இவ்வெடி பொருட்களை நேற்று இரவு மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கைக்குண்டுகள்-2, பெரிய கத்தி, ரீ-56 ரக தன்னியக்க துப்பாக்கிக்கு பயன்படுத்தும் மகசின்கள்-6, ரவைகள் 365 என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு இராணுவ குண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டுகள் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டதுடன் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.