மீபே பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொள்ளைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவரு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரவ்வில பிரதேசத்தில் நேற்று பகல் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
500 கோடி ரூபா பெறுமதியான வைரம் மற்றும் 200 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளை மற்றும் வௌிநாட்டு நபர் ஒருவரை கடத்திய சம்பத்தில் சந்தேகநபர் தேடப்பட்டு வந்துள்ளார்.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.