தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் ஐ.தே.கவுக்கும் தொடர்பு – மஹிந்தானந்த

320 0

ஜனாதிபதி தேர்தலை நோக்காக கொண்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேசிய தௌஹீத் ஜமாதுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாகவும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அரசாங்கமே இடமளித்துள்ளதாகவும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

தொடர் குணடுத் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கே உள்ளது. நல்லிணக்கம், மனித உரிமை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தாமையினாலேயே இந்த நிலை ஏறற்பட்டுளளது.

எதிர்த்தரப்புக்கும் இந்த தௌஹீத் ஜமாத் அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்ட ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பினை பேணி வருகின்றது. 

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கடந்த 2014 ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அதன் வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் ஆதரவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

எனவே தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பை பேணிவந்துள்ள நிலையில் கடந்த நாட்களில் அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்களையும் வெளியிட்டிருந்தது. ஆனால் எதிரதரப்புடன் தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த எந்த அமைப்புக்களும் தொடர்பில் இல்லை.