மாளிகாவத்தை ஜும் ஆ பள்ளிவாசல் வீதியில் 3 குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முடிந்தால் வெடிப்பதை தடுக்குமாறும், மற்றொரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதியொன்று இருப்பதாகவும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு பொய்யான தகவல்களை கொடுத்து வதந்தியை பரப்பி பிரதேசத்தில் அச்சத்தை ஏற்படுத்தியவரை கைதுசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைத்த நாபர், மாளிகாவத்தை ஜும் ஆ பள்ளி வீதியில் 3 குண்டுகள் வைத்துள்ளதாகவும் முடிந்தால் மீட்குமாறும் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதிக்கு பொலிசாரும் இராணுவத்தினரும் சென்றபொது மக்களை அப்புரப்படுத்தி நான்கு மணிநேரமாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அவ்வாரு எந்த குண்டும் மீட்கப்படவில்லை.
அதேபோல் 22 ஆம் திகதியும் ஆளிகாவத்தையில் சந்தேகத்துக்கு இடமான பொதியொன்று உள்ளதாகவும் பொய் தகவல் வழங்கப்பட்டது.
இவை இரண்டு தொடர்பிலும் 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு வழங்க யார் என விசாரணை மேற்கொண்டபோது அது இரண்டும் ஒரே நபரால் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குறித்த நபர் வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் உலாவுவதாக பொலிசார் தொலைபேசி நகர்வுகளை மையப்படுத்தி கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து அந் நபரை உடனடியாக கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.