தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் சகோதரியின் வீட்டிலிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி 03, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள மொஹமட் ஹாசிம் மதனியா (வயது 25 ) என்ற சஹ்ரானின் சகோதரியின் வீட்டில் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.