வதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: விஜயகாந்த்

308 0

201610130807287004_vijayakanth-report-jayalalithaa-should-be-self-explanation_secvpfவதந்திகள் பரவுவதை தடுக்க ஜெயலலிதா தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் இலாக்காகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்ததாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தினம் ஒரு தலைவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதும், பின்னர் வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து முதல்-அமைச்சர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவக்குழு கூறியதாகவும் சொல்லிக்கொண்டுள்ளனர்.

இதுவரை யாருமே ஜெயலலிதாவை சந்தித்ததாகவோ, ஜெயலலிதாவிற்கு நெருங்கிய தோழியான சசிகலாவை சந்தித்ததாகவோ தகவல் இல்லை. நலம் விசாரிக்க செல்பவர்கள் இரண்டாம் தளத்திற்கு சென்றதாகவும், அங்கு ஒரு சில மருத்துவர்களையும், சில அமைச்சர்களையும் சந்தித்ததாகவும் சொல்வது வாடிக்கையாக உள்ளது.

வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை மக்களையும், மருத்துவமனை ஊழியர்களையும் மிரட்டுவதை காட்டிலும் இந்த வதந்திகளுக்கு காரணமான முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தந்து வாக்களித்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.