முக்கிய சூத்திரதாரிகளை ஒரு மாதத்தில் பகிரங்கப்படுத்துவோம் – ராஜித

254 0

நடத்­தப்­பட்ட  குண்­டு­தாக்­கு­தலின் பின்­ன­ணியில்  உள்ள  முக்­கிய  தரப்­பி­னரை இன்னும்  ஒரு மாத  காலத்­திற்குள்  பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம் என சுகா­தார அமைச்சர்  ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று  செவ்­வாய்க்­கி­ழமை  இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  

அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில் 

தேசிய  தவ்ஹீத் ஜமாத்  அமைப்பு  உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள்  2015ஆம் ஆண்­டுக்கு பிறகே   வளர்ச்­சி­ய­டைந்­த­தாக குறிப்­பிடும் எதிர்­த­ரப்­பினர்  கடந்த  காலத்தில் இடம் பெற்ற செயற்­பா­டு­க­ளையும்  மீட்­டிப்­பார்க்க வேண்டும்.  சர்­வ­தேச அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­டைய  இவ்­வா­றான  அமைப்­புக்கள்  குறு­கிய  காலத்­திற்குள்   வளர்ச்­சி­ய­டை­ய­வில்லை.

தற்­போது  நாட்டில் நடை­மு­றையில் உள்ள  அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்தும் முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்­திலே உரு­வாக்­கப்­பட்­டன. தேசிய   தவ்ஹீத்  ஜமாத் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள்  ஷரி-யா   சட்­ட­மூ­லத்­திற்கு அமைய செயற்­பட ஆரம்­பித்­தன. 2013ஆம் ஆண்டு   மே. மாதம் 13ம் திகதி    ஷரி-யா  சட்­ட­மூ­லத்­திற்­கான  வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்­டது.

பாகிஸ்தான்,  ஆப்­கா­னிஸ்தான் உள்­ளிட்ட முஸ்லிம் நாடு­களில்  நடை­மு­றையில் உள்ள  சட்­டங்­களை   உள்­ள­டக்­கி­ய­தாக   ஷரி- யா  சட்­ட­மூலம் காணப்­பட்­டது. இச்­சட்டம்  அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை  கொண்­டி­ருந்­த­மை­யினை ஏன்  அப்­போது பொறுப்பில் இருந்­த­வர்கள் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.  இச்­சட்­டத்தின்  ஊடா­கவே  அரபுக் கல்­லூ­ரி­களும்,  தனி முஸ்லிம்  கற்கை  நிலை­யங்­களும்   அமைக்­கப்­பட்­டுள்­ளன.

 இச்­சட்ட மூலத்தின்  அடிப்­ப­டை­யிலே   இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள்   செயற்­பட்­டன. கடந்த அர­சாங்­கத்தில் மாத்­திரம்  இச்­சட்­டத்தை  ஆதா­ர­மாகக் கொண்டு  200 பள்­ளி­வா­சல்கள்  நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினை  குறிப்­பி­டு­வது அவ­சியம். 2015ஆம் ஆண்­டுக்கு  பிறகு எவ்­வித   அமைப்­புக்­களும்,   பள்­ளி­வா­சல்­களும்   ஷரி- யா   சட்­டத்தின் ஊடாக  அமைக்­கப்­ப­ட­வில்லை.

அரச  புல­னாய்வு  பிரி­வி­னரை  தேசிய அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்­தி­ய­தாக  குறிப்­பி­டு­வது   ஏற்றுக் கொள்ள முடி­யாது.   சட்­டத்­திற்கு முர­ணாக  செயற்­பட்டு பத­வியை துஸ்­பி­ர­யோகம் செய்­த­வர்­களே    கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.  தேசிய   தவ்ஹீத் அமைப்பில்    பணி புரிந்த   26  பேருக்கு   2009ஆம் ஆண்­டுக்கு   பிறகு   சம்­பளம் அவ­சியம் இல்­லா­மலே வழங்­கப்­பட்­டுள்­ளமை  தொடர்பில் முன்னாள்  பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பொறுப்பு    கூற வேண்டும்.

  இஸ்­லா­மிய  அடிப்­ப­டை­வா­தி­க­ளாக  செயற்­பட்­டுள்ள  தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளுடன் எதிர்க்­கட்­சியின்   பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான  விமல் வீர­வன்ச,  உதய கம்­மன்­பில, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய  ராஜ­பக்ஷ தொடர்பு கொண்­டுள்­ள­மையை  புகைப்­பட ஆதா­ரங்­களின் ஊடாக அறிய  முடி­கின்­றது. இவர்கள் அனை­வரும் சிங்­கள அடிப்­ப­டை­வா­திகள்   என்­பது   அனை­வரும்  அறிந்த  விடயம்.

கடந்த அர­சாங்கம்   முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் தூர­நோக்­க­மற்­றவை.   இவர்கள் பொறுப்­பற்ற விதத்தில் முன்­னெ­டுத்த  நட­வ­டிக்­கை­களின் விளை­வி­னையே  தற்­போது  எதிர்க்­கொள்ள நேரிட்­டுள்­ளது. தற்போது   ஒன்றும் அறியாதவர்கள் போல்     கருத்துக்களை  வெளியிடுவதால் எவ்வித    உண்மைகளையும்  மறைக்க முடியாது.   அடிப்படைவாத  அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக  அரசாங்கம் செயற்படும் போது அவர்கள்   ஷரி-யா  சட்டத்தை    தமது கேடயமாக  பாதுகாத்தனர்.   21ஆம் திகதி   நடத்தப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய  அரசியல்  புள்ளியை  இன்னும் ஒரு மாத காலத்திற்குள்   பகிரங்கப்படுத்துவோம்  என்றார்.