வெசாக் தினத்தை எளிமையாகக் கொண்டாடுங்கள் என பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பகட்டத் தாக்குதல்கள் என்றே தோன்றுகிறது. எனவே இச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினருக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அத்தோடு நாட்டைச் சூழ்ந்திருக்கின்ற ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்காத நிலையில், இம்முறை வெசாக் கொண்டாட்டங்களை எளிமையான முறையில் முன்னெடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். அதுவே அனைவருக்கும் நன்மையானதும், பாதுகாப்பானதுமாகும் என்று பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பினால் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான மிலேச்சத்தனமான தொடர்குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னரும் மக்கள் புத்திசாலித்தனமாகவும், பொறுமையுடன் செயற்பட்டு இணக்கமான முறையில் செயற்பட்டுள்ளனர்.