பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ஷகர் பெர்க் தனது மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.
இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.
மார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.
மனைவி தூங்குவதற்கு வசதியாக ஷூகர்பெர்க் தயாரித்துள்ள மரப்பெட்டி
காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.
இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.