புலனாய்வுத்துறை மீது குற்றம் சுமத்தி அரசியல் நலன்காண எதிர்த்தரப்பின் ஆவாவை பாதுகாப்பு துறை தோற்கடித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிவதே தற்போதைய தேவையாகும்.
பிரதான குற்றவாளியை அடையாளம் காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு துறை முன்னெடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன் அறிவித்தலை விடுத்திருந்தது.அது மாத்திரமின்றி தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் விசாரணைகளை விரைவாக பூர்த்தி செய்தும் வருகின்றது.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் பிரதான நபர் யார் என்பதை கண்டறிய வேண்டும். சில அமைப்புகள் பல்வேறு நோக்கங்களுக்காக இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்கின்றன. தமக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு அயுதங்களை விற்பனை செய்துக்கொள்வதற்காகவும் , அரசியல்வாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில் செயற்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
எனவே இவ்வாறான நிலையில் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளவது சிறப்பானதாக அமையாது. ஆனால் அது எமது நோக்கமல்ல. தற்போதைய அளவில் தேசிய பாடுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் விசாரணை நடவடிக்கைகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் உண்மையான குற்றவாளி யார் என்பது கண்டறியப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு பிரிவு விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.