சிறுபான்மை விவகாரங்களுக்கான ஜக்கிய நாடுகளின் அறிக்கையாளார் ரீட்டா ஜசக் தலைமையிலான குமுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ரீட்டா ஜசக் இன்று பிற்பகல் வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுல ராசா மற்றும் சுகாதார அமைச்சர் பாலசுப்பிரமணியம் சத்தியலிங்கம் ஆகியோரை வடக்கு மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் கொழும்பில் தங்கியிருக்கின்ற காரணத்தினால் முதலமைச்சரின் சார்பில் கல்வி அமைச்சரும் சுகாதார அமைச்சரும் குமுவினரை சந்தித்துள்ளனர்
நேற்று முன்தினம் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்த அறிக்கையாளார் ரீட்டா ஜசக் தலைமையிலான குமுவினர் அரசாங்கம்; எதிர்க்கட்சியினர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கிலுள்ள பொது மக்கள் குமுவினர் ஆகியோரை சந்தித்துள்ளனர்
10 சிறிலங்காவில் தங்கியிருக்கும் அறிக்கையாளார் குமுவினர் எதிர் வரும் 20 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர்.
இதேவேளை, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டும் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசாக் நாடியா றீரா தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்ததாக வடக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சரும் கல்வியமைச்சருமாகிய தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரை சந்தித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
போரின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற காணி விடுவிப்பு, தடுப்பிலுள்ளவர்கள் விடுவிக்கப்படாமை, காணாமல் போனோருக்கு தீர்வு கிடைக்காமை போன்ற பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் நல்லிணக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் நம்பிக்கை அற்றிருப்பதாக ஐக்கியநாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் வடக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சரும் கல்வியமைச்சருமாகிய தம்பிராசா குருகுலராசா தெரிவித்தார்.