நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு ஜனாதிபதியும் பொறுப்புக் கூறவேண்டும் – ஜி. எல்.

439 0

நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதலுக்கு  அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறிதொரு தரப்பினரை  குற்றஞ்சாட்ட முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தலைமையிலே  அரசாங்கம் செயற்படுவதால், பாதுகாப்பு அமைச்சும் இவரது பொறுப்பாக்கத்தின் கீழ் காணப்படுகின்றது. ஆகவே நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கு ஜனாதிபதியும் முக்கிய பொறுப்புக்  கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்திலும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் கடும் போட்டித்தன்மையே காணப்படுகின்றது. அத்துடன், ஒருவரையொருவர், குறை கூறிக்கொள்வதில் எதுவித பயனுமில்லை. இவரும் தமது அமைச்சு சார்ந்த நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். இவரது கவனயீனமே தாக்குதலுக்கு பிரதான காரணமாகும். ஆகவே அனைவரும் நிர்வாகத்தின் பலவீனத்தன்மையினை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தோடு, இனிவரும் மிகுதி காலத்திலாவது மக்களின் உயிரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முறையாக இணைந்து மேற்கொள்வது அவசியமாகும் என பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.