ராணுவ சீருடை, கடவுச் சீட்டு, அடையாள அட்டை என்பவற்றுடன் ஒருவர் கைது

240 0

லுணுகல, படாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் இராணுவ சீருடைகள் மூன்றை வைத்திருந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண பொறுப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ஜகத் பலிஹத்கார தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 18 கடவுச் சீட்டுக்களும் 7 அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

41 வயதுடைய இந்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது