பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டம் தேவை!

296 0

நாடு கடந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத செயற்பாடுகள் எமது நாட்டில் இடம்பெற முன்னர் அவற்றை தடுக்க முடியாமல் போனமையானதும் அவர்களுக்கு  எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனமையும் எமது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இவை தொடர்பான புதிய சட்டங்களை இயற்ற முடியாமல் போனமையே  காரணமாகும் எனவும் இப்போது சட்டத்தை திருத்த ஒரு தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதாவது அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்து  புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரகாலம் கடந்துள்ள நிலையில் கருதினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பெயரில் விசேட பிரார்த்தனை வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தேன். 

இந்த தாக்குதல் சம்வத்துடன் தொடர்புட்ட சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் மூலமாக பல இரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜிஹாதி பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு செயற்படும் இவர்களை அடையாளங்கண்டு  அவர்களை நீதியின் முன்னாள் நிறுத்தப்படுவதுடன் வெகு விரைவில் இந்த பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக துடைத்தெரியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.