அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு – யாழ்ப்பாணம், கொழும்பு – மன்னார், கொழும்பு – மட்டக்களப்பு, கொழும்பு – திருகோணமலை – கொழும்பு – பதுளை ஆகிய இடங்களுக்கான புகையிரத சேவைகள் இடம்பெறும். இந்த நகரங்களில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவை பகல் வேளையில் இடம்பெறும்.
அனைத்து அலுவலக மற்றும் புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.