சஹ்ரானின் மனைவி, மகள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர் – பொலிஸ்

244 0

கல்முனை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இராணுவபடையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் போது 26 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பாதுகாப்பான வீடுகளை சோதனையிடும் போது அந்த வீட்டில் இருந்து ஆண், பெண்கள் உட்பட சிறுவர்களின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமி மற்றும் பெண்ணொருவர் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலின்போது பாதுகாப்பு படையினருக்கு எந்தவிதமான தீங்கும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது, இராணுவம் மற்றும் பொலிசார் தற்பொழுது இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமியான மொஹமட் சஹ்ரான் றுசைனா என்பர் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் கயமடைந்த பெண்ணான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பர் அவரின் மனைவி எனவும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.