இலங்கையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சிறப்பு அதிகாரிகள் சிலர் நியமிக்கப்படவுள்ளனர்.
இதன்படி இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் 9 விசேட பெண் காவல்துறை அதிகாரிகளை நிமிக்க காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறை அதிகாரிகள், பிரதி காவல்துறைமா அதிபர்வரையில் பதிவி உயர்;வு பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஆரியதாச குரே குறிப்பிட்டுள்ளார்.