மாவனல்லைப் பிரதேசத்தில் அண்மையில் புத்தர் சிலை உடைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கம்பொளை, நாவலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான மொஹமட் இப்றாஹீம் சாஹித் மற்றும் மொஹமட் இப்றாஹீம் சாதிக் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.