மாத்தளை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட உக்குவளைப் பகுதி வீடொன்றில் இயங்கி வந்த போலி கச்சேரியொன்று கண்டி மாவட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் சுற்றி வளைக்கப்பட்டதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, குறித்த வீட்டிலிருந்து 40 வயதான ஜமால்டீன் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் 16, போலி அடையாள அட்டைகள்- 7, வங்கி புத்தகங்கள்- 5, கணினி-1, பிரின்டர், ஸ்கேனர் இயந்திரங்கள், யானைக்கு வைக்கப்படும் வெடிகள், துப்பாக்கி ரவைகள்- 23, வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களுடனான இறப்பர் முத்திரைகள்- 29, மனித உரிமைகள் நிறுவனத்தின் பெயர்ப்ப பலகை, இலட்சினைகள், நகர சபை வர்த்தக உறுதிப்பத்திரம், திருமண சான்றிதழ்கள், ஊடகங்களின் பெயர்ப்பலகைகள், சிம் அட்டைகள், வாள் , பல்கலைக்கழக சான்றிதழ்கள், பல்கலைக்கழக பாட சான்றிதழ்கள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.