காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, ரகசிய காவல்துறை பிரிவு மற்றும் கையூட்டல் மோசடி விசாரணை பிரிவு என்பன அரசியல் நோக்கில் செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக, தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் நன்மையான செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதனிடையே, யுத்தத்தை நிறைவு செய்த இராணுவ அதிகாரிகள் பலர் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதற்கு தாம் அதிர்ப்தியை வெளியிடுவதாகவும், ஆணைக்குழுக்கள் விசாரணை செய்யும் போது தமது நிலை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.