வாய்ப்புகளை இழந்தது இலங்கை – பிரதமர் கவலை

340 0

ranil11-720x480இலங்கையில் அபிவிருத்தி, ஏற்றுமதி விருத்தி மற்றும் தொழில் வாய்ப்புகள் என்பவற்றை உயர்மட்டத்தில் கொண்டுசெல்லும் வாய்ப்பு, கடந்த 10 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உலக அபிவிருத்தி ஏற்றுமதி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ரத்து செய்யப்படும் வகையில் கடந்த அரசாங்கம் செயற்பட்டமையானது மிகப்பெரிய தவறாகும்.

இந்த வரிச்சலுகையை சரியாக பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஸ் தற்போது ஆடைத் தொழிற்துறையில் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.