இலங்கையில் வறட்சி – 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

358 0

drought-2-1200x550இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக, 20 மாவட்டங்களில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாகாணங்களிலும் வறட்சியினால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 313 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வறட்சி காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், சில பகுதிகளில் இடைக்கிடையில் நீர்வெட்டு அமுலாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் வறட்சியான காலநிலையால், நாட்டின் பல பகுதிகளில் காட்டுத்தீ பரவும் நிலையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பதுளை மாவட்டத்தில் இவ்வாறான தீப்பரவல்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளை முதல் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறி இருக்கிறது.