வங்கக்கடலில் உருவானது பானி புயல் – 30 ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு!

320 0

வங்கக் கடலில் உருவான பானி புயல், 30ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கிடையே, இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.


இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் பானி புயலாக மாறியது. சென்னைக்கு அருகே உள்ள பானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும். இது30ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.