ரஷ்யாவின் வானூர்திகள் சிரியாவின் அலெப்போ நகரில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
மிகக்கடுமையான குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் குறைந்த பட்சம் 25 பேர் பலியாகினர்.
அவர்களில் சிறார்களே அதிகமானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலெப்போவின் கிழக்கு நகரில் இருந்து பொது மக்கள் வெளியேறும் வகையில், சிரிய அரசாங்கம் மோதல் தவிர்ப்பு ஒன்றை அமுலாக்கி இருந்தது.
எனினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் ரஷ்யாவின் வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே சிரிய விவகாரத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் நடத்தி வந்த அமைதிப்பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.