மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டவிடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமானமுறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நல்லதண்ணி பிக்கிவ் தனியார் தோட்டப்பகுதிக்கு சொந்தமான விடுதி ஒன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு வோக்கிடோக்கி மற்றும் மினசாரத்தின் ஊடாக பயன்படுத்துகின்ற உபகரணங்கள் சிலவற்றை நல்லதண்ணி பொலிஸார் நேற்று இரவு மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லதண்ணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நல்லதண்ணி பகுதியில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த நான்கு வோக்கிடோக்கிகளும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் விடுதி உரிமையாளர் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் நபருடையது எனவும் சவுதி அரேபியாவில் உள்ள உரிமையாளரின் பணிப்புரைக்கு அமைய குறித்த தனியார் தோட்டத்தை நடாத்திசெல்ல ஒரு முகாமையாளரும் ஒரு உதவி முகாமையாளரும் நியமிக்கபட்டுள்ளதாகவும் நல்லதண்ணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த விடுதியில் எதற்காக இந்த வோக்கிடோக்கிகள் வைக்கபட்டது என்ற விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் ஆரம்பித்துள்ளதோடு குறித்த தனியார் தோட்ட சவுதி உரிமையாளரை வாக்கு மூலம் வழங்குவதற்காக நல்லதண்ணி பொலிஸ்நிலையத்திற்கு வருமாறு நல்லதண்ணி பொலிஸாரினால் சவுதி அரேபியாவிற்கு தகவல் அனுப்பிவைக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .