இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு தேசிய பாதுகாப்பு குழுவொன்றை அனுப்புவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
இந்தியா இலங்கைக்கு உதவ திட்டமிட்டுள்ளது அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்ட ஊடகம் தெரிவித்துள்ளது.
அதன்படி தேசிய பாதுகாப்பு குழு இலங்கை வரவுள்ளது என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள் பயங்கரவாத விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இவர்கள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் உத்தரவு கிடைத்ததும் இவர்கள் இலங்கை வருவார்கள் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.