யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில்பொலிஸ் சோதனைச்சாவடி!

249 0

யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான ஐந்து சந்திப் பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் வீதியோரமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பெருமளவான பொலிஸார் நிறுத்திவைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

யாழ்.நகரத்துக்குள் உட்செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் பொலிஸார், வாகனத்துக்குள் தீவிர சோதனையை மேற்கொள்வதுடன், வாகனத்தின் ஆவணங்கள் தொடர்பாகவும் சோதனை பரிசோதிக்கின்றனர்.