சாய்ந்தமருது, கல்முனை கிராம மக்கள் தற்காலிகமாக வெளியேற்றம்

544 0

பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கையின் காரணமாக கல்முனை, சாய்ந்தமருது கிராமங்களிலுள்ள மக்கள் தற்காலிகமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், சோதனை நடவடிக்கையின் போது ஏற்படும் சம்பவங்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.