நெதர்லாந்து அறங்கூறுனர் சபையில் இலங்கை முறையிடவுள்ளது

320 0

kidney_2588202fசிறுநீரக கோளாறை ஏற்படுத்தும் வகையிலான இரசாயன உரத்தை உற்பத்தி செய்யும் நெதர்லாந்து நிறுவனத்துக்கு எதிராக, அந்த நாட்டின் அறங்கூறுனர் சபையில் இலங்கையும் சாட்சி வழங்கவுள்ளது.

இதற்காக இலங்கையின் நிபுணர்கள் குழு ஒன்று நெதர்லாந்துக்கு பயணிக்கவுள்ளது.

இன்று முதல் 19ஆம் திகதி வரையில் நெதர்லாந்தில் இந்த அறங்கூறுனர் சபை செயற்படவுள்ளது.

இதில் 15 நாடுகள் குறித்த நிறுவனத்துக்கு எதிராக சாட்சி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.