கடவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பியன்வில பிரதேசத்தில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பகல் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதுடன், கொரிய நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.