அகதிகளின் வருகையை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நியுசிலாந்து அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை அவுஸ்திரேலியா தட்டிக்கழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் தீவிலும், மானஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளை பொறுப்பு ஏற்க நியுசிலாந்து அரசாங்கம் முன்வந்திருந்தது.
எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இதனை தட்டிக்கழித்தது.
இவ்வாறு வாய்ப்பளிக்கப்பட்டால் அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளின் பிரவேசம் அதிகரிக்கும் என்பதாலேயே அவுஸ்திரேலியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இது அநீதியானது என்றும், சர்வதேச அகதிகள் விதிகளை மீறும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.