தாம் ஜனாதிபதியானது நாட்டை பிரிக்கவோ, துண்டாடவோ இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை
குறிப்பிட்டார்.
இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அரசாங்கத்தை சிலர் விமர்சிக்கின்றனர்.
நாட்டைப் பிளவுப் படுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு நாட்டை காட்டிக் கொடுப்பதாகவும், பௌத்த சமயத்தின் முக்கியத்துவத்தை இல்லாது செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் இவை அனைத்தும் அரசியல் லாபத்துக்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.
மாறாக நாட்டை சக்திமயப்படுத்தவே தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.