குண்டுத் தாக்குதல்களுக்கும் எனக்கும் எனது சகோதர்ரகளக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கூட இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியூதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
வங்குரோத்து அரசியல் செய்ற்பாடுகளினூடாவும் தேசியப்பட்டியலினூடாகவும் பாராளுமன்ற உறுப்பினராகிய எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்கள் கடந்த 52 நாள் அரசியல் நெருக்கடியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கெஞ்சிக் கூத்தாடினார். ஆனால் அதற்கான சந்தரப்பத்தை நாங்கள் வழங்கவில்லை.
அப்போது எஸ்.பி. திஸாநாயக்க என்னுடன் பேசிய ஒலிநாடாக்கள் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த ஒலிநாடாக்களை நான் வெளியிட விரும்பவில்லை. என்னுடன் அவர் பேசவில்லை என்று மறுத்தால் அதனை வெளிப்படுத்த நான் தயாராகவே உள்ளேன். எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்களின் சுயநல ஆட்சிக்கு நான் துணைப்புரியவில்லை என்பதற்காக என்னையும், எனது சகோதரர்களையும் முஸ்லிம் சமுதாயத்தையும் அனாவசியமாக இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவது நியாயமற்றதாகும்.
எனவே முஸ்லிம் மக்களை பயங்கரவாதத்தோடு ஒருமித்துக் காட்டி பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை திசைத்திருப்ப இடமளிக்க முடியாது என்றார்.