தேசிய பாதுகாப்புக்காக ஒன்றிணைய நாம் முன்வருகின்றோம் – முச்சக்கரவண்டி சாரதிகள்

373 0

முழு நாட்டையும் பாதுகாப்பதற்கு உதவி செய்வது தேசிய உரிமை, கடமை மற்றும் பொறுப்பு என முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் அதன் சங்கமும் இணைந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட  தற்கொலை தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து நாட்டில்  பாதுகாப்பு மற்றும் மக்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கை பெரும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டை பாதுகாக்க அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து செயற்படுகின்றனர் அவர்களோடு முச்சக்கரவண்டியின் சாரதிகள் மற்றும்  முச்சக்கரவண்டியின் சங்கங்கள் இணைந்து செயற்படும் என தெரிவித்துள்ளனர். 

முழு நாட்டையும் பாதுகாப்பதற்கு உதவி செய்வது தேசிய உரிமை, கடமை மற்றும் பொறுப்பு என முச்சக்கவண்டிகளின் சாரதிகள் மற்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு படையினர்  மற்றும் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நாம் வெவ்வேறான நடடிவக்கைகளுக்கு உதவி செய்யத் தயாராகவுள்ளோம். 

எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க உதவி செய்வது எமது கடமையாகும். இது தொடர்பில் நாம் எமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளோம். 

இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணிப்போர் மற்றும் முச்சக்கர வண்டிகளில் கொண்டுசெல்லப்படும் பயணப்பொதிகளை அவதானிக்குமாறு அறிவித்துள்ளோம்.  

அத்தோடு ஏனைய வாகனங்களின் நபர்கள் தொடர்பாக அவதனமாக இருக்குமாறும் அத்தோடு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கும் படி தெரிவித்துள்ளோம். 

முடிந்தவரையில்  பாதுகாப்புக்கு உதவி செய்ய முச்சக்கரவண்டி சாரதிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.