ஒய்வு பெற்றுள்ள படை வீரர்கள் 50 பேர் தொழிநுட்ப அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்(11) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.ஒய்வு பெற்ற படை வீரர்களின் மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒய்வு பெற்ற படை வீரர்களின் அறிவு மற்றும் அனுபவங்களை தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்தல் மற்றும் படை வீரர்களின் நலன் என்பனவே இதன் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
படை வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த காலங்களிலிருந்த அனைத்து அரசாங்கங்களையும் விட, அவர்களின் நலன் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.