பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

389 0

panneerselvam-621x414முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவரது பொறுப்புக்கள் அனைத்தும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் சம்மதத்துடன் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக, கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் ‘ஒரு சில நாட்களில் முதல்வர் வீடு திரும்புவார்’ என கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன் ‘அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து, அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ‘தமிழக அரசின்செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற, துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும். முதல்வர் வசமுள்ள பொறுப்புக்களை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றித் தர வேண்டும்’ என, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., வலியுறுத்தியது. பா.ம.க உட்பட வேறு சில கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், தலைமை செயலர் ராம மோகன ராவ், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சமீபத்தில் கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பொறுப்பு முதல்வரை நியமிப்பது தொடர்பாக, அவர்களிடம் வலியுறுத்தியதாக தெரியவருகிறது. அதனால் முதல்வர் வசமுள்ள பொறுப்புக்களை, மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படலாம் அல்லது துணை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, செய்திகள்வெளியாகின.

ஆனால், காவிரி விவகாரம் குறித்தே, அமைச்சர்களிடம் கவர்னர் ஆலோசித்ததாக, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட மற்றுமொரு அறிக்கையில்முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள் அனைத்தும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டங்களை, அவரே தலைமையேற்று நடத்துவார். முதல்வர் அறிவுரைப்படியே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை, இந்த மாற்று ஏற்பாடு நீடிக்கும். அதே நேரத்தில், முதல்வராக ஜெயலலிதாவே தொடர்வார். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.