சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அது அமெரிக்கா மற்றும் ரஷியா தலையீட்டால் முறிந்தது.அதை தொடர்ந்து சிரியா அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியா கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் அலெப்போ நகரம் மீது தொடர்ந்து குண்டு வீசி சிதைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த குண்டு வீச்சில் சுமார் 150 பேர் பலியாகினர். அதற்கு கண்டன குரல்கள் எழுந்தன.
அதை பொருட்படுத்தாத ரஷியா தனது போர் விமானங்கள் மூலம் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்தி வருகிறது.நேற்று நடந்த குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.இத்தாக்குதல்களை தொடர்ந்து இந்த மாத இறுதியில் பிரான்ஸ் செல்ல இருந்த தனது பயணத்தை அதிபர் விளாடிமிர் புதின் ரத்து செய்துள்ளார்.