குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கை வரும் பிரித்தானிய குழு பிரித்தானியப் பிரதமர் திரேசா மே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.
இதன்போது குண்டுத்தாக்குதல் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் தனது அனுதாபத்தை பிரித்தானியப் பிரதமர் வெளியிட்டிருக்கின்றார்.
அதேபோன்று பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் உதவியை வழங்க தயார் என்றும் இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் பிரித்தானியாவின் விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.