விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!

327 0

 பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை  அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவதற்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்  இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து  பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை  அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க அதற்கான  வர்த்தமாணி அறிவித்தலை  அரசாங்கம் நேற்று வெளியிட்ட நிலையில் இன்று பாராளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் குறித்த சட்டமூலம் குறித்த விவாதம் நாளை முழுநாள் விவாதமாக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.  

நாளை காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் கூடுவதுடன் நாளைய தினம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.