மஹிந்தவை ஏமாற்றிய கருணா!

367 0

mr_030909_04கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார்.

வல்லரசு நாடான இந்தியாவினால் கூட வீழ்த்த முடியாமல் போன விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் ஒரு கருவியாக கருணாவை மஹிந்த ராஜபக்ச பயன்படுத்திக்கொண்டார் என்று கூட சொல்லாம்.

அவ்வளவு நெருக்கம் கொண்ட மஹிந்த ராஜபக்சவை விநாயகமூர்த்தி முரளிதரன் என்று அழைக்கப்படும் கருணா இன்று ஏமாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்டிருந்தார். அவரின் தோல்விக்கு தமிழ் மக்களும் ஒரு காரணமாக அமைந்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள மஹிந்த ராஜபக்ச இன்று தனது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்நிலையிலேயே தற்போது பாதயாத்திரை, மக்கள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு செயற்பாடுகளில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டு வருகின்றார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக மட்டக்களப்புக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்திருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் வருகையினையொட்டி மட்டக்களப்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் கலந்துகொண்டனர்.எனினும், மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் நெருங்கி செயற்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

கருணாவின் வருகையை எதிர்பார்த்திருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. எனினும், விநாயகமூர்த்தி முரளிதரன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.