290 பேரில் 204 பேரின் சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு!

392 0

குண்டுத் தககுதல்களில் உயிரிழந்த 290 பேரில் 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு தேசிய வைத்தியசலையில் உள்ள 140 சடல்ங்களில் 89 சடலங்களும்,  நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள 104 சடல்ங்களில் 92 சடலங்களும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள 29 சடல்ங்களில் 23  சடல்ஙகளும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைஎ எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதன்போது நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் சட்ட வைத்திய அதிகரிகளின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்கடடினார். 

இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 35 சடலங்களும் வடக்கு கொழும்பு போதன வைத்தியசாலையில் 6 சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படாதுள்ளது.

இதேவேளை இன்று மாலைவரை கொழும்பு வைத்தியசாலையில் 20 வெளிநாட்டவர்களின் சடலங்கள் இருந்ததாகவும், சிகிச்சைகளை முடித்துக்கொண்டு 22 வெளிநாட்டவர்கள் வெளியேறிச் சென்றுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.