ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அமித்ஷா, அருண்ஜெட்லி சென்னை செல்கின்றனர்.

323 0

201610120448338938_amit-shah-arun-jaitley-likely-to-visit-apollo-hospital-in_secvpf-gifதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்.

டாக்டர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டார்.

மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி, தி.மு.க.       பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல தமிழக தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரித்து செல்கிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோர் இன்று சென்னை செல்கின்றனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாலை 5 மணி அளவில் செல்கிறார்கள்.

அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.