இந்தியாவில் கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் அறிமுகம்

343 0

201610112359539825_indian-railways-to-introduce-coaches-with-glass-roof-soon_secvpf-gifதமிழகத்தின் பெரம்பூர் நகரில், இந்திய ரெயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா கழகம், ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு  மற்றும் ஒருங்கிணைந்த பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகியவை ஒன்றிணைந்து இந்த ஆடம்பர பெட்டிகளை வடிவமைக்கின்றன.

இந்த கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும்.

ஆரம்பத்தில் 4 கோடி மதிப்பில் இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.

முதல் பெட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ரெயிலில் இணைக்கப்படும்.

அதேவேளையில் மற்ற 2 பெட்டிகள் விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கு வழியே செல்கிற ரெயில்களில் இணைக்கப்படும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.